• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மிசிசாகா மேயர் பதவி வெற்றிடமானத்தைத் தொடர்ந்து அது சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

கனடா

மிசிசாகா மேயர் பதவி வெற்றிடமானத்தைத் தொடர்ந்து அது சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

மிசிசாகாவை வதிவிடமாகக் கொண்ட காயா. நாகேந்திரா எனும் சமூக சேவை அலுவலர்  சமீபத்தில் சி. பி .சி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இது சம்பந்தமாகப்  பேட்டி அளித்திருந்தார். அக்கருத்துக்கள் இங்கே தரப்படுகின்றன.

“கனடாவுக்கு வந்த நாளிலிருந்து சுமார் நாற்பது வருடங்களாக நான் மிசிசாகாவில் வாழ்ந்து வருகிறேன். வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகரித்துள்ள இக்காலத்தில் இப்பிரதேச மக்கள் மிகச் சரியான தலைமைத்துவத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

இப் பிரதேசத்தில் மக்கள் தொகை அதிகரித்துச் செல்கின்றபோதும் அது இச் சமுதாயத்தில் குடும்பங்கள் பரம்பரையாக வசதியுடன் வாழ்வதற்குப் பொருத்தமான இடமாயிருப்பது இன்றியமையாததாகும்.

வீட்டு வாடகை மிக அதிகமாயுள்ளது,அத்துடன் இப்பிரதேச மக்கள் குடியிருப்பு வசதிகள் பெறுவதும் கடினமாயுள்ளது. இப்பிரதேசத்தில் தமது வாழ்வை முதலீடு செய்த இளையோர், இப்பிரதேசத்தில் கல்வி கற்றோர் மிசிசாகாவுக்கு  மீண்டு வந்து இங்கு தொழில் செய்ய வேண்டும். ஏனெனில் அவர்கள்தான் அடுத்த சந்ததியாயிருக்கிறார்கள்.

எமக்கு சக்திமிக்க, எளிய மக்களுக்காக பாடுபடும்  ஒரு தலைமை வேண்டும்."   

இவ்வாறு தனது கருத்தைக் கூறினார் மிசிசாகாவைச் சேர்ந்த காயா. நாகேந்திரா.
 

Leave a Reply