• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜய்யை தொடர்நது சூர்யா செய்யும் விஷயம்.. 

சினிமா

நடிகர் விஜய் லியோ பட வெற்றிக்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி68 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

விஜய் இந்த படத்தில் சில காட்சிகளில் 19 வயது மாணவராக நடிக்கிறார் என்றும், அதற்காக பாடி ஸ்கேனிங் உள்ளிட்ட விஷயங்கள் செய்யப்பட்டு வருகிறது என்றும் தகவல் முன்பு வெளியானது நினைவிருக்கும்.

இந்நிலையில் சூர்யா அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கும் சூர்யா 43 படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அடுத்த வருட தொடக்கத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்க இருப்பதால் சூர்யா தனது உடலை கல்லூரி மாணவரை போல மற்ற தீவிர பயிற்சியில் இருக்கிறார் என தெரிகிறது.

விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் இப்ப்டி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  
 

Leave a Reply