• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு

சினிமா

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் டாப் காமெடியனாக இருந்து வருகிறார். எல்லா முன்னணி நடிகர் படங்களிலும் யோகி பாபு தொடர்ந்து நடித்து வருகிறார். வாரிசு, ஜெயிலர், ஜவான் என இந்த வருடம் பல படங்களில் நடித்த அவர், ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.
  
இந்நிலையில் தற்போது தெலுங்கில் யோகி பாபு அறிமுகம் ஆகிறார். மாருதி இயக்கத்தில் பிரபாஸ் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் தான் யோகி பாபு நடிக்க இருக்கிறார்.

தமிழில் வாங்கும் சம்பளத்தை விட தெலுங்கில் அவர் மூன்று மடங்கு சம்பளம் வாங்குகிறாராம். அதனால் தான் மொழி தெரியவில்லை என்றாலும் தெலுங்கில் தைரியமாக களமிறங்குகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. 
 

Leave a Reply