• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் - ரவி கருணாநாயக்க

இலங்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக களமிறங்குவார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் இணைந்து இந்த நாட்டை அபிவிருத்திப் பயணத்தில் கொண்டு செல்கின்றன.

மேலும் நாடு இலகுவான பயணம் செல்லவில்லை. இருண்ட பயணம் ஒன்றையே முன்னெடுக்கின்றது.

எனினும் ஒருவித முன்னோக்கு பார்வையுடன் கூடிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மக்களுக்கு முழுமையான நிவாரணங்களை வழங்க முடியாவிட்டாலும் அவர்களை படுகுழியில் இருந்து வெளியே கொண்டுவந்து பாதுகாப்பாக முன்னோக்கிக் கொண்டு செல்வதையே காணக்கூடியதாக இருக்கின்றது.

2024 ஆம் ஆண்டு மக்களுக்கும் நாட்டுக்கும் மங்களகரமான ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறோம்.

ஜனாதிபதி என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்க சுயாதீனமான ஜனாதிபதியாக செயற்பட வேண்டும். அவர் அனைத்து கட்சிகளின் கூட்டாகதான் இதனை செய்கிறார்.

பலரும் போட்டியிட விரும்புகிறார்கள். ஆனால் ஒரு நாடு ஆபத்தில் இருக்கும் போது நாட்டுக்கு பாதுகாப்பை கொடுக்கும் தலைமைத்துவம் இருக்கும் நபர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply