• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கூட்டத்தை விலக்கிக் கொண்டு நடிகர்திலகம் சிவாஜி வருகிறார்...

சினிமா

காரைக்காலில் தனது தந்தை சீர்காழியின் ஆத்ம ரசிகரான ஒருவரது வீட்டு திருமணத்தின் போது நடந்த சம்பவத்தை ஜாலியாக விவரித்தார் சிவசிதம்பரம்........
 அந்த கல்யாணத்துக்கு நானும் போயிருந்தேன். தடபுடல் ஏற்பாடுகள். அப்பாவின் கச்சேரி சொல்லப்போனால்...
 அப்பாவின் தேதியை வாங்கிட்டு தான் திருமண தேதியை முடிவு செய்தார் அவர். அவ்வளவு தூரம் அப்பாவின் முரட்டு பக்தர். இப்படிப்பட்ட அதி தீவிர ரசிகர்கள் அப்பாவுக்கு தமிழகமெங்கும் உண்டு.. அவர்களில் பலர் இப்போதும் என்னிடம் தொடர்பில் உள்ளார்கள்..‌
 காரைக்கால் கச்சேரியில்  ஜனங்கள் வந்து கொண்டே இருக்க...
 அப்பா தனது முழு ஜோரில் பாடுகிறார்...
 திடீரென்று கூட்டத்தில் சலசலப்பு....

 கூட்டத்தை விலக்கிக் கொண்டு நடிகர்திலகம் சிவாஜி வருகிறார்...
 ஒரு வழியாக முதல் வரிசையில் அவரை உட்கார வைத்தார்கள்.. 
ரசிகர்களோ அவரை விடுவதாக இல்லை.... 
முன்வரிசைக்கு முந்துகிறார்கள்.....
சட்டென்று சிவாஜி  ஒரு வேலை செய்தார்.......
 முன் வரிசையில் இருந்து எழுந்து மேடையில் பின்புறம் வந்து ஏறி கடம் வாசிக்கும் வித்வான் பக்கத்தில் உட்கார்ந்ததோடு....
 அவரிடமிருந்து கடத்தையும் வாங்கி தன் வயிற்றில் கவிழ்த்துக் கொண்டார்...
 அப்புறம் கேட்கவா வேண்டும் ஒரே ரகளை தான்....
 அப்பா சிரித்துக்கொண்டே கச்சேரியை தொடர்கிறார்....
 உள்ளத்தில் நல்ல உள்ளம் என்று அவர் ஆரம்பிக்க நடிகர் திலகம் முகத்தில் எக்கச்சக்கமான உற்சாகம்.....
 சிவாஜிக்கு இயற்கையாகவே சங்கீதம் ஆர்வம் இருந்ததனால் சுமார் அரை மணி நேரம் லயம் தப்பாமல் கடம் வாசித்தது ஆச்சரியமாக இருந்தது...
 திருமண வீட்டிலிருந்து கிளம்பும்போது அடுத்த கச்சேரி எப்போது சொல்லுங்கண்ணே வந்துவிடுகிறேன் என்று உற்சாகமாக சொல்ல.....
 அப்பா வாய் விட்டு சிரித்ததெல்லாம் ஏதோ நேற்று நடந்தது போல எனக்கு தோன்றுகிறது.....
 தனது தந்தையுடன் சந்தோஷத்துடன் கழித்த அந்த சங்கீத நாட்களை சுவாரசியமாக அசைபோட்டார் சிவ சிதம்பரம்......
 கூடவே அந்த நாளும் வந்திடாதோ என்ற ஏக்கமும் அவர் குரலில் தெரிந்தது......
 

 

Leave a Reply