• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களுக்கு தடைக்காலம் – அரசாங்கம் ஆலோசனை

இலங்கை

2024 மற்றும் அதற்கு பின்னர் வெளிநாட்டு கடல் அறிவியல் ஆராய்ச்சி கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதை நிறுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்குள் பயணிப்பதற்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதற்கு நிலையான செயற்பாட்டு நடைமுறையை இலங்கை தெரிவித்த சில வாரங்களுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் மற்றும் சீன புவி இயற்பியல் மற்றும் நில அதிர்வு ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 க்கு கொழும்பிற்கு அனுமதி வழங்குவதற்கான இலங்கையின் முடிவு, இந்தியா மற்றும் அமெரிக்காவினால் கடுமையான கண்டனத்தையும் இராஜதந்திர அழுத்தத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் இலங்கை கடல் அல்லது அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் ஆய்வுகளை நடத்த வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களுக்கு ஒரு வருட தடைக்காலத்தோடு அனுமதி வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் சியாங் யாங் ஹாங் 3 என்ற கப்பலுக்கும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என சீன அரசாங்கம் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து அரசாங்கம் தற்காலிகத் தடைத் திட்டத்தைப் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply