• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எல்லை தாண்டி ஜேர்மனிக்கு ஷாப்பிங் செல்லும் பிரான்ஸ் நாட்டவர்கள்

கிழக்கு பிரான்சில் வாழ்பவர்கள் எல்லை கடந்து ஜேர்மனிக்கு ஷாப்பிங் செல்வது நீண்ட காலமகாவே நிகழ்ந்துவரும் விடயம்தான்.

காரணம், அங்கு அதிக சந்தை போட்டி மற்றும் அதிக சொந்த பிராண்ட் தயாரிப்புகள் கிடைப்பதால், பெரும்பாலும் பொருட்களின் விலை குறைவாக இருக்கும்.

ஆனால், இப்போது தாங்கள் ஜேர்மனிக்கு சென்று ஷாப்பின் செய்வதற்கு வேறு காரணங்கள் உள்ளன என்கிறார்கள் பிரான்ஸ் நாட்டவர்கள்.

என்ன காரணம்?

அதாவது, பணவீக்கம் அதிகரித்து வருவதால், பெரிய அளவில் சேமிப்புகளைச் செய்வது கடினமாக இருப்பதால், பிரான்ஸ் மக்கள் எல்லை கடந்து ஷாப்பிங் செய்யச் செல்கிறார்களாம்.

பணவீக்கம் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் எல்லை கடந்து ஜேர்மனிக்குச் சென்று ஷாப்பிங் செய்வதன் மூலம் செலவைக் குறைப்பது முன்னெப்போதையும் விட இப்போது முக்கியமாகியுள்ளது என்று சிலர் கூறுகிறார்கள்.

ஆக, தினசரி கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கவே எல்லை கடந்து ஜேர்மனிக்கு செல்லத் துவங்கியுள்ளார்கள் பிரான்ஸ் நாட்டவர்கள் சிலர். மளிகைப்பொருட்கள் முதல் சிகரெட்கள் வரை அவர்கள் ஜேர்மனியில்தான் வாங்குகிறார்கள்.

பிரான்சை ஒப்பிடும்போது, சில பொருட்கள் பாதிவிலைக்கு கிடப்பதாகவும், சில நான்கில் ஒரு பங்கு விலை குறைவாக கிடைப்பதாகவும் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனாலும், எல்லா பொருட்களையும் மக்கள் வாங்குவதில்லை. காரணம், உணவுப்பொருட்கள் விலை பிரான்சைவிட ஜேர்மனியில் அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரான்சில் உணவுப்பொருட்கள் விலை 22 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், ஜேர்மனியிலோ, 28 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஆகவே, பெட்ரோல் செலவுசெய்து ஜேர்மனிக்கு வந்து பிரான்சைவிட அதிக விலையுள்ள பொருட்களை வாங்கிச் செல்வதில் அர்த்தமில்லை. எனவே, எந்தெந்த பொருட்கள் விலை பிரான்சைவிட குறைவாக உள்ளதோ, அவற்றை சரியாக கண்டுபிடித்துவாங்குவதுதான் புத்திசாலித்தனம் என்கிறார் நுகர்வோர் அமைப்பொன்றின் தலைவரான டேனியல் என்பவர்.
 

Leave a Reply