• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜேர்மன் விசா தொடர்பில் ஒரு நல்ல செய்தி

ஜேர்மன் விசா அப்பாயிண்ட்மெண்ட்க்காக காத்திருக்கும் காலகட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான ஜேர்மன் தூதரான பிலிப் (Philipp Ackermann) இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் விசா சேவைகள் தொடர்பில் சில முன்னேற்றங்கள் செய்துள்ளோம் என்று கூறிய பிலிப், ஜேர்மன் விசா அபாயிண்ட்மெண்ட்க்காக இனி இரண்டு முதல் ஐந்து நாட்கள் காத்திருந்தால் போதுமானது என்று கூறியுள்ளார்.

இந்தியாவைப் பொருத்தவரை, இந்தியர்களுக்கு விசாக்கள் முந்தைய ஆண்டைவிட விரைவாக வழங்கப்பட உள்ளன என்றார் அவர்.

ஜேர்மனியில், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் முதல் பல்வேறு துறைகளில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆகவே, பணி வழங்குவோர் வெளிநாட்டு திறன்மிகு பணியாளர்கள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளனர்.

அதற்கேற்றாற்போல, ஜேர்மனியில் வெளிநாட்டவர்கள் எளிதில் பணியில் சேர உதவும் வகையில், ஜேர்மன் நாடாளுமன்றமும் திருத்தப்பட்ட திறன்மிகுப் பணியாளர் சட்டம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply