• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் அதிகரிக்கும் டெங்குநோய் - சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

இலங்கை

வட மாகாணத்தில் கடந்த 12 மாத காலப்பகுதியில் 3 ஆயிரத்து 100 பேருக்கு டெங்கு நுளம்பின் தாக்கம் எற்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பதில் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே வைத்தியர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வட மாகணாத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கத்தினால் 2 ஆயிரத்து 600 நோயாளர்களும், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவவுனியா ஆகிய மாவட்டங்களில் ஏனைய நோயாளிகளும் இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த வாரத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதில் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்டவர். மற்றையவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் என வைத்தியர் கூறியுள்ளார்.

கோப்பாய், சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம், நல்லூர், பருத்தித்துறை, கரவெட்டி, ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

எனவே, பொதுமக்கள் தாங்கள் சார்ந்த பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்” என வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பதில் பணிப்பாளர் வைத்திய சத்தியமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
 

Leave a Reply