• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருந்தாலும் எந்தப் பாடகருக்கும் அது ஒரு சிறப்பான நிகழ்வே 

சினிமா

இளையராஜா அவர்களின் இசையில் இதுவரையில் எத்தனை பாடகர்கள் தமிழ் திரைப்படப் பாடல்களைப் பாடியிருப்பார்கள் என்று கணக்குப்போட்டு பார்க்கலாமே என்று தோன்றியது. 
என் ஞாபகத்திலிருந்தும், ஏற்கனவே எடுத்துவைத்திருந்த பழைய குறிப்புகளிலிருந்துமாக எல்லாப் பெயர்களையும் எடுத்து பட்டியலிட ஆரம்பித்தேன்.
இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருந்தாலும் எந்தப் பாடகருக்கும் அது ஒரு சிறப்பான நிகழ்வே ஆகும். 
அதுபோலவே இளையராஜா அவர்களும், அனுபவம் வாய்ந்த மற்றும் பழம்பெரும் பின்னணிப் பாடகர்களும் தனது இசையில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்கிற நோக்கத்தில் அவர்களுக்காக வாய்ப்புகளை ஏற்படுத்திய நிகழ்வுகளும் உண்டு.
இத்தனை அம்சங்களையும் மனதில்கொண்டு ஒவ்வொரு பெயருக்கு நேரே அவரவர் பிறந்த ஆண்டுகளையும் குறிப்பிட்டு பட்டியலிட்டுள்ளேன். அவற்றைக் கொண்டே அவர்கள் எந்தெந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதை 
நாம் அறிந்து கொள்ளலாம். (இதில் சில பாடகர்களின் பெயர்கள் விடுபட்டிருக்க வாய்ப்புள்ளது)
இவ்வாறு பட்டியலிட்டபின் எனக்கு இப்படிச் சொல்லத் தோன்றுகிறது:
உங்களது அதிசய இசையில் இத்தனை தலைமுறைகளைப் பாட வைத்த பெருமை உங்களை மட்டுமே சாரும், ராஜா சார்.
அது உங்களால் மட்டுமே முடிந்திருக்கிறது.
ஆம், 
உங்களுக்கு முன்னும் சரி, 
உங்களுக்குப் பின்னும் சரி,
எவருக்கும் இதுபோல் ஓர் அரிய வாய்ப்பு இதுவரை கிட்டியதில்லை, இனியும் எவருக்கும் கிட்டும் என்ற நம்பிக்கை எனக்கு அறவே இல்லை.

இயற்கை உங்களை இசைக்காகப் படைத்தது 
வீண்போகவே இல்லை, எங்கள் ஐயா ????
இப்படிக்கு,
இளையராஜா இசைப்பிரியன்.
இதோ மேற்சொன்ன பாடகர்களின் பட்டியல், அவர்கள் பிறந்த ஆண்டுகளின் வரிசைப்படி:
 1). T M சௌந்தரராஜன் (1922)
 2). S வரலட்சுமி (1925)
 3). P பானுமதி (1925)
 4). நாகூர் E M  ஹனீஃபா (1925)
 5). P B ஶ்ரீநிவாஸ் (1928)
 6). லதா மங்கேஷ்கர் (1929)
 7). பாலமுரளிகிருஷ்ணா (1930)
  8. T V கோபாலகிருஷ்ணன் (1932)
 9). M S ராஜேஸ்வரி (1932)
10). ஆஷா போஸ்லே (1933)
11). ஜிக்கி (1935)
12). P.சுசீலா (1935)
13). மனோரமா (1937)
14). ஜமுனாராணி (1938)
15). S.ஜானகி (1938)
16). L R ஈஸ்வரி (1939)
17). K J யேசுதாஸ் (1940)
 18. இளையராஜா (1943) 
19). P ஜெயச்சந்திரன் (1944)
20). மலேசியா வாசுதேவன் (1944)
21). வாணி ஜெயராம் (1945)
22). S P பாலசுப்பிரமணியம் (1946)
23). உஷா உதூப் (1947)
24). கங்கை அமரன் (1947)
25). அருண்மொழி (1951)
26). அஜய் சக்கரவர்த்தி (1953)
27). S N சுரேந்தர் (1953)
 28. கமல்ஹாசன் (1954)
29). ஹரிஹரன் (1955)
30). உன்னிமேனன் (1955)
31). சுதா ரகுநாதன் (1956)
32). தீபன் சக்கரவர்த்தி (1956)
33). உமாரமணன்
34). சுனந்தா
35). மாதங்கி
36). கிருஷ்ணசந்தர் (1960)
37). வடிவேலு (1960)
 38. ஜென்ஸி (1961)
39). S P சைலஜா (1962)
40). K S சித்ரா (1963)
41). சுஜாதா (1963)
42). மால்குடி சுபா (1965)
43). பாம்பே ஜெயஶ்ரீ (1965)
44). மனோ (1965)
45). உன்னிகிருஷ்ணன் (1966)
46). சங்கர் மகாதேவன் (1967)
47). ஷர்ரத் (1969)
 48. அனுராதா ஶ்ரீராம் (1970)
49). கைலாஷ் கேர் (1973)
50). சுவர்ணலதா (1973)
51). சாதனா சர்கம் (1974)
52). மதுபாலகிருஷ்ணன் (1974)
53). விஜய் பிரகாஷ் (1976)
54). பவதாரினி (1976)
55). ஹரிஷ் ராகவேந்திரா (1976)
56). விஜய் ஏசுதாஸ் (1979)
57). ஶ்ரீமதுமிதா (1979)
 58. யுவன் ஷங்கர் ராஜா (1979)
59). கார்த்திக் (1980)
60). ஶ்ரீராம் பார்த்தசாரதி (1981)
61). ஷ்ரேயா கோஷல் (1984)
62). ஸ்வேதா மோகன் (1985)
63). ஹரிச்சரன் (1987)
64). சித் ஶ்ரீராம் (1990)
65). சத்தியபிரகாஷ் (1990)
66). அனன்யா பட் (1993)
67). பிரியங்கா (1997)
 68. ஶ்ரீநிஷா (1999)
….
இன்னும் தொடரும்..
???? பிற்சேர்க்கை (நண்பர்கள் தந்த கூடுதல் தகவல்களால், நன்றியுடன்):
69). சீர்காழி கோவிந்தராஜன் (1933)
70). M S விஸ்வநாதன் (1928)
71). L R அஞ்சலி
72). சூலமங்கலம் முரளி 
73). S P B சரண் (1972)
74). T L மகாராஜன் (1954)
75). M ரமேஷ்
76). சசிரேகா
77). மின்மினி
78). கவிதா கிருஷ்ணமூர்த்தி
79). ப்ரீத்தி உத்தம்சிங்
80). பூரணி
81). ஷோபா சந்திரசேகர் (1956)
82). மஞ்சுளா (1959)
83). சுர்முகி
84). லதா ரஜினிகாந்த்
85). மகாநதி ஷோபனா
86). லலிதா சாகரி
87). பிரம்மானந்தன்

(பட்டியல் தொடரும்..)
Sivanandan Veeraiah
 

 

Leave a Reply