• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கந்தையா திட்டம்

கனடா

"கந்தையா திட்டம்" என்ற கனவோடு இருக்கும் கனடிய தமிழரானபஞ்சலிங்கம் கந்தையா அண்மையில் LMD International என்ற சஞ்சிகையில் இடம் பிடித்திருந்தார்.
இலங்கையை மீள கட்டி எழுப்புவது எப்படி என்ற கேள்விக்கு மேற்கத்தைய நாட்டில்  தனது வாழ்வின் பெரும் பகுதியை செலவு செய்த ஒரு இலங்கையில் பிறந்து புலப்பெயர்வுக்கு நிர்பந்திக்கப்பட்டவரின் பதில் தான் "கந்தையா திட்டம்"
தனது கந்தையா திட்டம் குறித்தும் குறித்தும் இலங்கை குறித்த புலம்பெயர் சமூகத்தின் பார்வையில் ஒரு வடிவம் குறித்தும் பஞ்சலிங்கம் கந்தையாவின் கேள்வி பதில் பகுதி LMD International சஞ்சிகையின் October - December 2023 வெளியீட்டில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் புலம்பெயர் சமூகம் முதலிடுவது முதல், அரசியல் தீர்வு தொடர்பான நிச்சயமற்ற தன்மை உட்பட பல விடயங்கள் இந்த கேள்வி பதில் பகுதியில் இடம்பிடித்துள்ளன. 

"we need to strengthen the democratic institutional fabric of the country, the rule of law and democratic value in society" (நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பையும், சட்டத்தின் ஆட்சியையும், சமூகத்தில் ஜனநாயக மதிப்பையும் வலுப்படுத்த வேண்டும்) என்கிறார் இந்த உரையாடலில்  சிவமணி என்னும் பஞ்சலிங்கம் கந்தையா. 
ஜனநாயகமும், சட்டமும் இலங்கையில் இல்லை என்பதுவும் அதை ஆட்சியாளர்களிடன்  எதிர்பார்க்க முடியாது என்பது தான் நான் உட்பட பலரது நிலைப்பாடு.
"கந்தையா திட்டம்" போன்ற முயற்சிகள் சாத்தியம் ஆகுமோ தெரியாது!
ஆனாலும் அவற்றை பேசு பொருளாகியது ஒரு நல்ல ஆரம்பம்.

Lankathas Pathmanathan

Leave a Reply