• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் மகனுக்கு வாழ்த்துக்கள்!!பார்த்திபனுக்கு பாராட்டுகள்!!

சினிமா

தமிழ் ஈழத்தில் பிறந்து, கனடாவின் தலைநகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் தமிழ் மகன் பார்த்திபன் சிவராஜா அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது!!

ஆமாம் கடந்த வாரம் டொரன்டோ வில் நடைபெற்ற ஒண்டாரியோ சொசைட்டி ஆப் பிராபிசனல் ( Ontario Society of Professional Engineers) 90 ஆயிரம் உரிமை பெற்ற தொழில் முறை பொறியாளர்களை கொண்ட இந்த நிறுவனத்தினால் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த பொறியியலுக்கான விருது பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது !!

இது அவருக்கு மட்டும் அல்ல தமிழராகிய எங்களுக்கும் மிகவும் பெருமையை சேர்க்கின்றது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

ஆமாம் தமிழன் உலகில் எந்த ஊரில் சாதிக்கும் போதும் எங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது , பாராட்ட துடிக்கிறது!!

அதுவும் நம்ம ஊர், நமக்குத் தெரிந்தவர் சாதனை படைக்கும் போது நாங்களும் சேர்ந்து அவரை வாழ்த்தி மகிழ்வோம்!!

உங்கள் சாதனைப் பயணம் தொடர!!மென்மேலும் பல வெற்றிகள் உங்களை வந்து சேர இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்!! 

நன்றி வணக்கம்.
இவன் தமிழன் செல்வா குமரன்!

Leave a Reply