• Welcome to TamilsGuide
செய்திகள் 1

WTA பைனஸ்ல் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி - மீண்டும் முதலிடத்தை பெற்றார் இகா ஸ்விடெக்

இலங்கை

ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி WTA பைனஸ்ல் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, இகா ஸ்விடெக் பெண்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார்.

உலக தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகளுக்காக இடம்பெறும் இத்தொடரின் இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார்.

59 நிமிடங்கள் நீடித்த இறுதிப் போட்டியில் ஜெசிகா பெகுலாவை 6-1 6-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி ஸ்விடெக் வெற்றிபெற்றார்.

2011 ஆம் ஆண்டு பெட்ரா கிவிடோவா 21 வயதில் பெற்றுகொட்ன வெற்றியை தொடர்ந்து 22 வயதுடைய இளம் வீராங்கனை சம்பியன் பட்டம் வெல்வது இரண்டாவது முறையாகும்.

அரையிறுதி போட்டியில் அரினா சபலென்காவை 6-3, 6-2 என வீழ்த்தி இகா ஸ்விடெக் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply