• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இத்தாலியில் உள்ள இந்த கிராமத்திற்கு சென்றால் 25 லட்சம் ரூபாய் கிடைக்கும்

இத்தாலியில் உள்ள கலாப்ரியா என்ற கிராமம் கடலோர அழகு மற்றும் மலை நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது. இந்த கிராமம் கடந்த சில ஆண்டுகளாக மக்கள்தொகை வீழ்ச்சியுடன் போராடி வருகிறது. 

இது கலாப்ரியா கிராம மக்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அந்த கிராமத்தின் நிர்வாகம் ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில், இத்தாலியில் நகரத்திலிருந்து கலாப்ரியா கிராமத்திற்கு வசிக்க வருவோருக்கு 28 ஆயிரம் பவுண்டு ( ரூ.25 லட்சம்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

40 வயதுக்குள் இருக்க வேண்டும், கைவிடப்பட்ட கடைகள், சிறுதொழில்களை நடத்தவோ அல்லது புதிதாக தொடங்கவோ முன் வர வேண்டும்.

மேலும், 90 நாட்களுக்குள் குடியேற வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

கிராமப்பொருளாதாரம் சரிந்து வருவதை சமாளிக்க கலாப்ரியா நிர்வாகம் இது போன்ற ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது.
 

Leave a Reply