• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரசனையில் மாற்றமில்லை. பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கு

சினிமா

2015 மெல்லிசை மன்னர் காலமான சமயம், தமிழ்நாட்டில் பாப்புலரா இருந்த பாடல் “ ஆளுமா டோலுமா” - அநிருத் வளர்ந்து வந்த நேரம். கிண்டலுக்காகச் சொல்வதுண்டு . அநிருத் இசையைக் கேட்டுத்தான் எம் எஸ் வி தாங்க முடியாமல் இறந்துட்டார். திரை இசைத் திலகம், மெல்லிசை மன்னர்களின் அந்த மெல்லிசைக்குப் பழகிய காதுகள் , இளையராஜாவின் மெலோடிகளில் ஊறித் திளைத்த காதுகளுக்கு அநிருத் இசை மிகவும் அந்நியமாகப் பட்டது. ஆனால் 2015 ல் ஒரு வயது நிரம்பிய என்னுடைய பேரன் ஆளுமா டோலுமாக்கு அப்படி ஆட்டம் போடுவான். இப்ப 2023ல் ஒன்னே கால் வயதே ஆன என்னுடைய பேத்தி “ நான் ரெடி தான் வரவா?” பாட்டுக்கு ஆட்டம் போடுது. அநிருத் பாடல்கள் ஒரே இரைச்சல் மயமாகத் தான் என் காதுகளுக்கு இன்றும் தெரிகிறது. 

நான் சொல்ல வந்தது என்னன்னா..FDFS - லியோ பார்த்தேன். நவீன வசதிகள் கொண்ட தியேட்டர். அநிருத் யின் பின்னணி இசையைப் பற்றி ஒரே வரியில் சொல்லணும்னா “ அபாரம்” 

தொடர்ந்து கவனித்து விட்டுச் சொல்கிறேன். விக்ரம், ஜெயிலர், லியோ இந்த மூன்று படத்தையும் தூக்கி நிறுத்தியது அநிருத் யின் பின்னணி இசை . திரைக்கதையில் ஓட்டையும் உடைசலுமாய் இருந்த இந்தப் படங்களை தூக்கி நிறுத்தியது அநிருத் என்ற இசைக்கலைஞனின் அபாரமான பின்னணி இசை மட்டுமே. இந்த ரேஸில் இப்போதைக்கு அநிருத் மட்டுமே தனித்து ஓடுகிறார் . ஜவானின் வெற்றியை வைத்துப் பார்க்கும் பொழுது இந்திய அளவிலும் அநிருத் தான் முன்னணியில் இருக்கிறார் என நினைக்கிறேன். வாழ்த்துகள்  அந்த இளைஞருக்கு????

அ. வெற்றிவேல்

Leave a Reply