• Welcome to TamilsGuide
செய்திகள் 1

E ஸ்ட்ரிங் 

சினிமா

இளைய ராஜாவுக்கும், ரஹ்மானுக்கும் மேற்கிந்திய இசை குருவான தன்ராஜ் மாஸ்டர் ஒரு முறை உடல் நிலை மோசமாகி படுத்த படுக்கையாக இருந்தார
அவரை காண இளையராஜாவும் வயலின் கல்யாணமும் போயிருந்தனர்.
சாய்வு நாற்காலியில் படுத்திருந்த அவரை தூக்கி பென்ச்சில் படுக்க வைத்து அவர் உடலை பிடித்து விட்டுகொண்டிருந்தனர்.
தன்ராஜ் மாஸ்டர் மெல்ல முனகினா.
அண்டாண்டே ... என்று.
இளையராஜாவுக்கு புரிந்தது.
கொஞ்சம் மெதுவாக பிடித்துவிட்டார்.
அண்டான்டே என்றால் மெதுவாக வாசிக்கவும் என்பது இத்தாலிய இசை மொழி.

கொஞ்ச நேரம் கழித்து விரல்களை பிடித்துவிடும்படி சொன்னாராம்.
இளையராஜா பெரு விரலை பிடித்தபோது 
இ ஸ்ட்ரிங் என்றாராம்.
இளையராஜாவுக்கு புரிந்தது. ஆனாலும் ஊர்ஜித படுத்திக்கொள்ள,
 சார் ... என்றாராம்.
கிட்டாரில் முதல் ஸ்ட்ரீங் எது என கேட்டாராம்.
E ஸ்ட்ரிங் என்றாராம்.
அதை பிடித்துவிடு என்றாராம்.
அதாவது சுண்டுவிரல்.
கால் விரல்களை கிட்டாரின் தந்திகளாய் பாவித்து சொல்லி இருக்கிறார்.
உடல் நிலை மோசமான போதும் உயிரில் கலந்த இசையின் மொழியிலேயே பேசியிருக்கிறார்.
அந்த இசை மேதையின் மாணவர்கள் இளையராஜாவாக, ரஹ்மானாக இருப்பதில் ஆச்சிர்யம் ஒன்றும் இல்லை.

Sampatth Kumar

 

Leave a Reply