• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புரொஃபசர் ஒரு ஜாடியில் தேநீர் கொண்டுவந்து வைத்தார்....

சினிமா

அந்த அலமாரியில் நிறையக் கோப்பைகள் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த கோப்பையில் தேநீரை எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார்....
பீங்கான் கோப்பை..கண்ணாடிக் கோப்பை....வெள்ளிக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள். மாணவர்கள் ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்து தேநீர் நிரப்பி அமர்ந்ததும்... புரொஃபசர் சொன்னார்...
சாதாரணமான மண் கோப்பைகளை யாரும் எடுக்கவில்லை. விலை உயர்ந்த அழகான கோப்பைகளைத்தான் நீங்கள் எல்லோரும் எடுத்திருக்கிறீர்கள் என்பதைக் கவனித்தீர்களா...? 
கோப்பையைக் கையில் வைத்திருக்கப்போகிறீர்கள். அவ்வளவுதான்... 
தேநீர்தான் உள்ளே போய் உங்களுடன் ஒன்றாகப்போகிறது. ஆனால், உங்கள் கவனம் கோப்பையில் நின்றுவிட்டது...
எனக்கு என்ன கிடைத்தது... 

அடுத்தவருக்கு எந்தக் கோப்பை போய்விட்டது என்பதில் சிந்தனை போய்விட்டதால், தேநீரின் 
உண்மையான ருசியைக் கவனிக்கத் தவறுகிறீர்கள்.... 
காதலும் அப்படித்தான்...
அந்த அற்புதமான உணர்வு கொண்டுவரும் ஆனந்தத்தை வெளித் தோற்றங்களுடன் தொடர்புபடுத்தி... உண்மையான வாழ்வின் தன்மையை  ருசிக்கத் தவறுகிறீர்கள்...

 

Leave a Reply