• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனிரூத் வீட்டில் விசேஷம்... ஒன்றுகூடிய திரைப்பிரபலங்கள்... 

சினிமா

பிரபல இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் வீட்டில் இடம்பெற்ற விசேஷத்தில் அவரின் குடும்பத்தினருடன் சினிமா பிரபலங்கள் பலர் இணைந்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழில் தனுஷ் நடத்த 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் அனிருத்.

இவரின் இசையமைப்பில் உருவாகும் பாடல்கள் எல்லாம் தற்போதைய இளைஞர்களுக்கு மத்தியில் ஒரு குஷியை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கும் அதனால் இவருக்கு அடுத்தடுத்து உச்ச நடிகர்களுக்கும் இசையமைத்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இவர் இசையில் தற்போது விஜய்யின் லியோ திரைப்படத்திற்கும் ஜவான் திரைப்படத்திற்கும் அதிக சம்பளம் வாங்கி இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், இவர் வசம் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் இருந்து வருகின்ற நிலையில், அனிருத் வீட்டில் ஆயுத பூஜை கொண்டாட்டத்தின் போது பல பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.  
 

Leave a Reply