• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேவர் மகன் வயது 31 

சினிமா

சிவாஜி என்ற யானைக்கு சோளப்பொறி தந்து காமெடி செய்து கொண்டிருந்த தமிழ் சினிமாவில் இந்த யானைக்கு கரும்பு கட்டு தந்த படம்  தான் தேவர் மகன்..
முதல்முதலாக சிவாஜி ரோலுக்கு விஜயகுமார், எஸ்.எஸ் ராஜேந்திரனைத்தான் முடிவு செய்திருந்தது படக்குழு. கமலுக்கு முழு திருப்தி கொடுக்காததால், இறுதியில் சிவாஜி கணேசன் உள்ளே வந்தார். அதுவும் மருத்துவ சிகிச்சை முடியும் வரை காத்திருந்து படமாக்கப்பட்டது.சிவாஜி கணேசனின் காட்சிகள் மொத்தம் 7 நாட்களில் படமாக்கப்பட்டது...
பஞ்சாயத்து காட்சி ஆகட்டும் டிக்கெட் கேன்சல் பண்ண சொல்லு என சங்கிலி முருகன் பேசுமிடமாகட்டும் என ஒவ்வொரு காட்சியிலும் தனித்து நின்றார் சிவாஜி 

அதேபோல ரேவதி ரோலில் முதலில் கமிட்டானவர் மீனா. சில நாட்கள் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. ஆனால் மீனா சிறிய பெண்ணாக இருந்ததால், அவரை நீக்கிவிட்டு ரேவதியை உள்ளே கொண்டு வந்தது படக்குழு.
மாயனாக வரும் நாசர் செய்யும் வில்லத்தனத்தில் அதகளப்படுத்துவார. கிளைமாக்ஸ் காட்சியில் அருவாளை கையில் வைத்துக் கொண்டு 'வாடா, தேவர்மவனே வா, எமனை பாத்திருக்கியா? நான்தென்' என்று கமலோடு போட்டிபோடுகிறார் நடிப்பில். 
வடிவேலுவின் கதாபாத்திரமும் சொல்லிக் கொள்ளும்படியாகவே அமைத்திருப்பது சிறப்பு.என்ன தின்ற கையாலே கழுவனும் கழுவுற கையாலே திங்கனும்..நீங்க தான் சொன்னீங்கள்ள உடல் மண்ணுக்கு உயிர் உங்களுக்கு னு என காமெடி வடிவேலுவின் உள்ளே இருந்த குணசித்திர நடிகர் வெளியே வந்த படம்.
படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, கதாநாயகன் அனைத்தும் நம் 'கமல் தான்.கமல் திரை வாழ்வில் மிக முக்கிய படம் ...
புள்ள குட்டிகள படிக்க வைங்கடா, உனக்குள்ள முழுச்சிகிட்டிருக்குற அதே மிருகம், எனக்குள்ள துாங்கிக்கிட்டு இருக்கு... 
.திடீர்னு அவன வேல் கம்பை தூக்கிப்போட்டுட்டு விஞ்ஞானம் பேச வாடான்னா எப்படி வருவான்?? நீ படிச்சவனாச்சே...கூட்டிகிட்டு வா..அங்கே கூட்டிகிட்டு வா..ஆனா அந்தப்பய மெதுவாதான் வருவான்..மெதுவாதான் வருவான்.
அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்.ஆனா வெத..நான் போட்டது.இதெல்லாம் என்ன பெருமையா??? கடமை ஒவ்வொருத்தரோடைய கடமை என்ற கூர்மையான வசனங்கள், படத்துக்கு மிக பெரிய பலம..
தேவர் மகன் படம் இறுதியில் எல்லாரையும் படிக்க சொல்கிறது. தான் செய்த தவறுக்கு தான் தான் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறுகிறது. அருவாளை குடுதிருங்க சாமி.. என்று கெஞ்சும் தவசியை ஜெயிலுக்கு அனுப்பி இருக்க முடியும். ஆனால் சக்தி அதை செய்யவில்லை.
சக்தி ஆரம்பம் முதலே, படிப்பு, சட்டம், கோர்ட் என்றே பேசுகிறார். ஆனால் அவருக்கு வேறு வழி இல்லாமல், வீழ்கிறார். இறுதியில் படிப்பு தான் எல்லாரையும் உயர்த்தும் என்று கூறி முடிக்கிறார். 
இன்றைக்கும் ஸ்கிரீன்பிளே கற்றுக் கொள்ள பாடமாக இருக்கும் படமும் தேவர் மகன்தான்.
இசைஞானி இல்லை என்றால் இந்த படம் இல்லை..போற்றி பாடடி பெண்ணே பாடல் ஒரு சமூகத்திற்க்கு ராஜாவின் மீது எதிர்ப்பையும் ஒரு சமூகம் பெரும் ஆதரவையும் தந்த பாடல்..
இஞ்சி இடுப்பழகி, சாந்து போட்டு மாசறு பொன்னே வருக பாடல் இசைஞானியை எவனும் நெருங்க முடியாது என நிரூபித்த பாடல்.அதுவும் வானம் தொட்டு போனா பாடல் மேற்கத்திய சங்கீத த்தில் ஆரம்பித்த லோக்கல் ஒப்பாரி பாடல் இந்த பாடல் மட்டுமே தனி ஆய்வு செய்யலாம்
 பெரும் வெற்றி பெற்று இந்த படம் ஐந்து தேசிய விருதுகளையும், இரண்டு பிலிம்பேர் பெற்று ஆஸ்காருக்கும் அனுப்பி வைக்கப்பட்ட படம் தேவர் மகன்
1992 ம் ஆண்டு தீபாவளிக்கு பாண்டியன் தேவர்மகன் ராசுகுட்டி, செந்தமிழ்பாட்டு, திருமதி பழனிச்சாமி என 5 படங்கள் ராஜாவின் இசையில் வந்து சூப்பர் ஹிட் பாடல்களை தந்த ராஜாவின் தீபாவளி ஆண்டு...

 

Pugal Machendran Pugal

Leave a Reply