• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சின்ன வயசுலையே கர்ப்பம் ஆனேன் - நடிகை ஷகீலா

சினிமா

பிட்டு படங்களில் நடித்த பிரபலமானவர் நடிகை ஷகீலா சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மிகப்பெரிய வசூலை பெற்றன. இளம் வயதில் பிட்டு படங்களில் நடித்த நடிகை ஷகிலா பண விஷயத்தில் அசால்டாக இருந்து விட்டார். இதனால் இவருக்கு தற்போது சொல்லிக் கொள்ளும்படி சொத்து எதுவும் இல்லை. எனவே யூட்யூப் சேனல்களில் பேட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்.
  
ஒரு காலத்தில் வசூல் ராணியாக இருந்த ஷகீலா தற்போது இந்த நிலைமையில் இருக்க காரணம் அவருடைய அறியாமை தான் காரணம்.

ஷகிலா படங்கள் அதிரி புதிரி வசூல் செய்தன. என்றாலும் அந்த வசூல் எல்லாம் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தான் சென்றது. தவிர ஷகீலாவுக்கு வரவில்லை. இதனை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

எனக்கு பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்று ஒரு படத்தில் நடிக்க வைத்து அந்த படத்தில் நான்கு படங்களுக்கான காட்சியை படமாக்கி நான்கு படங்களில் வந்த காட்சிகளை ஒட்டி அந்த படத்தில் நான் நடித்திருப்பதாக கூறி படத்தை விற்பனை செய்தார்கள்.

இதையெல்லாம் எப்படி எதிர்கொள்வது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றியம் பேசிய அவர் ஒரு முறை சிறு வயதிலேயே நான் கர்ப்பம் ஆகிவிட்டேன். என்னுடைய ஆண் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம் தான் இதற்கு காரணம்.

அவரால் தான் நான் கர்ப்பம் அடைந்தேன். நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று எனக்கு தெரியாது. காரணம் எனக்கு சரியான காலத்தில் பீரியட்ஸ் வராது. ஆறு மாதம் முதல் எட்டு மாதத்திற்கு ஒருமுறைதான் வரும்.

அதனால் எனக்கு இந்த விஷயம் தெரியவில்லை. என்னுடைய அம்மா தான் இதனை கண்டுபிடித்தார். வயிற்றை தொட்டுப் பார்த்து கையின் நாடி தொட்டு பார்த்து நான் கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தார்.

அதன் பிறகு எனக்கு சின்ன வயது என்பதால் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பும் செய்தார். என்னை பொறுத்தவரை அது தான் சரியான முடிவு என்று நான் சொல்வேன்.

ஏனென்றால் என்னுடைய வயது அவ்வளவு சிறிய வயது. அதையும் மீறி குழந்தை பிறந்திருந்தால் அது முறையற்ற குழந்தையாக இருந்திருக்கும். அந்த நபருடன் நான் இன்னும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த விஷயம் தெரிந்தும் என் அம்மா என்னை கண்டு கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார் நடிகை ஷகீலா. 
 

Leave a Reply