• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹாலிவுட் தரத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி 

சினிமா

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

மாபெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விறுவிறுப்பாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. 60 நாட்கள் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே அசர்பைஜானில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் தற்போது முழு படத்தையும் அங்கேயே முடித்துவிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்.

மேலும் விடாமுயற்சி படத்தை ஹாலிவுட் தரத்தில் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
 

Leave a Reply