• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்ட பகுதி

கனடா

குற்ற செயல்கள் காரணமாக கனடாவின் வடக்கு அல்பேர்ட்டா நகராட்சி மாவட்டத்தில் அவசர கால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கடுமையான குற்றச்செயல்கள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பகுதியில் மிக மோசமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  

வீடுகளை உடைத்து கொள்ளை, வாகனங்கள் களவாடப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அதிகளவான குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது குற்ற செயல்களின் எண்ணிக்கை 160% ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹேம்லெட் எனும் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான வன்முறை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்ற செயல்களின் அதிகரிப்பு காரணமாக குறித்த பகுதியில் அவசர கால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே குற்றச்செயல்கள் இடம்பெற்ற போதிலும் ஆறு மாதங்களாக குற்ற செயல்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், போதைப் பொருள் கடத்தல், போதை பொருள் விற்பனை, விநியோகம், களவு , கொள்ளை, தாக்குதல் என பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

Leave a Reply