• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் பிறந்தநாள் கொண்டாடிய 100 இற்கும் மேற்பட்டோருக்கு வலைவீச்சு

இலங்கை

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் 150 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குறித்த பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி நபர் ஒருவரின் பிறந்தநாளை கேக்வெட்டி கொண்டாடியுள்ளனர்.  அத்துடன் அதனை டிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இதன்போது இளைஞர்களின் செயற்பாடானது அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இச்சம்பவம் குறித்து யாழ் பொலிஸாருக்குத் தெரியப்படுத்திய போதும் பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ”சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடி பிறந்தநாள் கொண்டாடி, மக்களின் இயல்வு வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்க்ளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்தவகையில் இச்சம்பவம் தொடர்பில்  இருவரை கைது செய்த பொலிஸார் அவர்களை கடந்த 14 ஆம் திகதி நீதவான் முன்னிலையில்  ஆஜர்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த இருவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

இதனையடுத்து  பொலிஸார் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply