• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கனேடிய யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்

இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரேல்-கனடிய யுவதி உயிரிழந்துள்ளார்.

முன்னதாக இஸ்ரேலில் காணாமல் போனதாக கூறப்பட்ட கனடிய பெண் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதல்களின் பின்னர் குறித்த பெண் காணாமல் போயிருந்தார்.

தெற்கு இஸ்ரேலில் இசை நிகழ்ச்சி ஒன்றின் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த சம்பவத்தில் 22 வயதான ஷிர் ஜோர்ஜி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஜோர்ஜி தாக்குதலில் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல்களில் உயிரிழந்த நான்வாது கனடியர் ஜோர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உயிரிழப்புக்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் இரங்கல்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply