• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளரால் ஏற்பட்ட துயரம்

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த ஒருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரட்டைக் கத்திக்குத்து சமபவம் குறித்து பயங்கரவாத தடுப்பு பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர். தொடர்புடைய சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒருவர் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து 44 வயதான புலம்பெயர் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  
கைதான நபர் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர் என்றே கூறப்படுகிறது. தாம் தங்கியிருந்த பகுதியில் இன்னொரு புகலிடக் கோரிக்கையாளரை கத்தியால் தாக்கிய அந்த நபர், பின்னர் பொதுமக்களில் ஒருவரை தெருவில் வைத்து தாக்கியுள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், அந்த நபரை கைது செய்துள்ளனர். இதனிடையே கத்திக்குத்துக்கு இலக்கான பொதுமக்களில் ஒருவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பொலிசாருடன் உள்ளூர் பொலிசாரும் இணைந்து செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த இரட்டை கத்திக் குத்து சம்பவத்தை பயங்கரவாத செயலாக தற்போது கருதவில்லை என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், டீஸ் ஸ்ட்ரீட் பகுதியில் ஒருவரின் மரணம் மற்றும் மற்றொருவர் தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கிளீவ்லேண்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply