• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவகார்த்திகேயன் பட வசூலை முறியடித்த மார்க் ஆண்டனி.. 

சினிமா

மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். கடந்த 8ஆம் தேதி வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது.

முதல் நாளில் இருந்து வசூலில் சிறந்த ஓப்பனிங் கிடைத்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 87 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அதே போல் தமிழகத்தில் ரூ. 53 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை விஷால் திரை வாழ்க்கையில் எந்த ஒரு திரைப்படமும் செய்தா வசூல் சாதனையை மார்க் ஆண்டனி செய்துள்ளது.

இந்நிலையில், உலகளவில் ரூ. 87 கோடிக்கும் மேல் வசூல் செய்ததன் மூலம் இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த மாவீரன் படத்தின் வசூலை முறியடித்துள்ளது மார்க் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply