• Welcome to TamilsGuide
செய்திகள் 1

33 வயதில் பல்கலைக்கழக படிப்பில் சேர்ந்த பிரித்தானிய நடிகை

ஹரிபார்ட்டர் புகழ் எம்மா வாட்சன் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் படிப்பதற்காக சேர்ந்துள்ளார். 2001ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக ஹாரிபாட்டர் படத்தில் அறிமுகமானவர் எம்மா வாட்சன். அதன் பின்னர் ஹாரிபாட்டர் வரிசை படங்கள் மட்டுமன்றி பிற படங்களிலும் நடித்து புகழ்பெற்ற நடிகையாக மாறினார்.
  
பிரான்சில் பிறந்த இவர் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர். கடந்த 2019ஆம் ஆண்டில் லிட்டில் வுமன் படத்தில் நடித்த எம்மா, அதன் பின்னர் 4 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இந்த நிலையில் 33 வயதாகும் எம்மா வாட்சன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் Creative Writing படிப்பில் சேர்ந்துள்ளார்.

முதுநிலை படிப்புக்கு எம்மா தளத்தில் ஒரு சில விரிவுரைகளில் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும், மீதமுள்ள வேலைகள் ஒன்லைனில் மேற்கொள்ளப்படும்.

இந்தப் படிப்பு வயதானவர்களுக்கானது மற்றும் பகுதிநேர அடிப்படையில் செய்யலாம், இது எம்மாவின் Schedule-க்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் அவர் பிரபல நடிகை என்பதால், அவருக்கு வகுப்புகள் இருக்கும்போதெல்லாம் ஒரு பாதுகாப்புக் குழுவினர் உடன் இருப்பார்கள். 

Leave a Reply