• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்காட்சியை பார்க்க வரும் பார்வையாளர்களுக்காக நிர்வாண மாடல்களுக்கு நடுவே அமைக்கப்படும் பாதை

இலங்கை

லண்டனில் ராயல் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் கலை கண்காட்சி நாளை தொடங்கி வருகிற ஜனவரி 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் புகழ்பெற்ற கலைஞர் மெரினா அப்ரமோவிச்சின் படைப்புகள் இடம்பெற உள்ளது. இக்கண்காட்சி எல்லைகளை தாண்டி பார்வையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள விரும்பும் பார்வையாளர்கள் நிர்வாணமாக நிற்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இடைவெளி வழியாக தங்களது உடல்களை திணிந்து கொண்டு தான் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய கண்காட்சியின் தலைவர் ஆண்ட்ரியா டார்சியா, இந்த நடைமுறை பாலினம், பாலியல், ஆசை மற்றும் நிர்வாண தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான மோதலை ஏற்படுத்தும். இந்த கண்காட்சியில் கலைஞர்களின் 50 ஆண்டுகால வாழ்க்கை சிற்பம், வீடியோக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் காட்சிபடுத்தப்பட்டுள்ளது என்றார். நிர்வாண மாடல்கள் வழியாக செல்ல விரும்பாத பார்வையாளர்களுக்கு என்று தனிவழி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply