• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு

இலங்கை

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் வடமாகாணத்தில் வீடற்ற 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பில் இன்று (22)  இடம்பெற்ற  கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் நலன் பெறும் விதமாகவே  இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் குறைந்த வருமானம் கொண்ட நிரந்தர வீடற்ற குடும்பங்களை இனங்கண்டு வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நி”ரந்தர வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் 5 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாகவும், வீடொன்றுக்கு தேவையான வசதிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும்  ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வீடுகளின் கூரைகளைப் பயன்படுத்தி சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தைப் பெறுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுமொனவும்  ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply