• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒன்றாரியோவில் மற்றுமொரு அமைச்சர் பதவி விலகல்

கனடா

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மற்றுமொரு அமைச்சர் பதவி விலகியுள்ளார்.

மாகாண பொது மற்றும் வர்த்தக சேவை விநியோக அமைச்சர் காலீத் ரஷீத் இவ்வாறு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

லாஸ் வேகாஸிற்கு மேற்கொண்ட பயணம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இவர் அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பசுமை வலய வீடமைப்பு திட்டம் பக்க சார்பான முறையில் வழங்கப்பட்டதாக வீடு அமைப்பு அமைச்சராக கடமையாற்றிய  ஸ்டீவ் கிளார்க் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதேபோன்று வீடமைப்பு மற்றும் கட்டுமான நிறுவன பிரதிநிதிகளுடன் இணைந்து  காலீட், லாஸ் வேகாசிற்கு சென்றார் என தெரிவிக்கப்படுகிறது.

தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டால் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுவரையில் அமைச்சர் பதவி மற்றும் கட்சி உறுப்புரிமை என்பவனவற்றிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மிசாசாக தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply