• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிறந்தநாளில் தர்ஷனுடன் ஊர் சுற்றும் லாஸ்லியா

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமான இலங்கைப் பிரபலங்களான லாஸ்லியா மற்றும் தர்ஷனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு வர போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
  
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் பேச்சால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பிறகு முதன் முதலில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக ப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதற்குப் பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்த கூகுள் குட்டப்பா என்றப் படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் உடன் ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால் கவர்ச்சிக் காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த மற்றொரு போட்டியாளராக வந்த தர்ஷனுடன் இணைந்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வருகின்றது.

அதில் தர்ஷனுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் காரில் பாடல் போட்டு நடனமாடி ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவரின் இந்தப் பதிவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்ததோடு லாஸ்லியாவை திட்டியும் பதிவிட்டிருக்கிறார். 
 

Leave a Reply