• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உரிமைகளுக்காக போராடும் பெண்களுக்கு உடன் நிற்போம் - பிரதமர் ட்ரூடோ

ஈரானிய ஆட்சிக்கு எதிராக கனடா கூடுதல் தடைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, உரிமைகளுக்காக போராடும் பெண்களுக்கு உடன் நிற்போம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஹிஜாப் அணியாததால் பொலிஸார் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண் மாஷா அமினி (22) உயிரிழந்தது ஈரானில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
  
இளம்பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் பெண்களும், ஆண்களும் போராட்டத்தில் குதித்தனர். இதில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

உலக நாடுகள் இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கனடாவும் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தது. அத்துடன் ஈரானின் 6 மூத்த ஆட்சி அதிகாரிகள் கனடாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

2 நாட்களுக்கு முன் மாஷா அமினியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், ஈரானிய ஆட்சிக்கு எதிராக கனடா கூடுதல் தடைகளை அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட பதிவில், 'இஸ்லாமிய குடியரசு ஆட்சியை அதன் கொடூரமான நடத்தை மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதில் எங்கள் உறுதிப்பாடு அசைக்க முடியாதது.

எங்கள் அரசாங்கம் புதிய தடைகளை அறிவித்தது. மேலும் ஆட்சியின் மீது செலவுகளை சுமத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்' என தெரிவித்தார்.

இந்த நிலையில், மாஷா அமினியின் மரணம் இஸ்லாமிய குடியரசு ஆட்சியின் முறையான துன்புறுத்தல் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அடக்குமுறையின் நேரடி விளைவாகும். அவர் இறந்த ஒரு வருடத்தில் கனடா இதை மிகத் தெளிவாக கூறியுள்ளது.

ஈரானிய பெண்கள், சிறுமிகள் மற்றும் அவர்களின் மனித உரிமைகளுக்காகப் போராடும் மற்றவர்களுடன் நாங்கள் நிற்கிறோம் என ட்ரூடோ மீண்டும் பதிவிட்டுள்ளார். 

Leave a Reply