• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதல் நாள் உலகளவில் மார்க் ஆண்டனி படம் செய்த வசூல்.. 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி.

 இப்படத்தில் இவர்களுடன் இணைந்து சுனில், செல்வராகவன், ரிது வர்மா என பலரும் நடித்துள்ளனர். நேற்று வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த வரவேற்பு என்கின்றனர். இனி வரும் நாட்களில் இந்த வசூல் இரட்டிப்பு ஆகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply