• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிக் பாஸ் வருகிறாரா நடிகை ரேகா நாயர்?

சினிமா

சின்னத்திரை ரசிகர்கள் தற்போது அதிகம் எதிர்பார்த்து இருக்கும் பிக் பாஸ் 7வது சீசன் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. ஏற்கனவே வெளியான பல்வேறு ப்ரோமோ வீடியோக்களும் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.
  
போட்டியாளர்களாக விஜய் டிவியை சேர்ந்த பல பிரபலங்கள் வர இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அதற்கான உத்தேச பட்டியலும் வைரலாகி கொண்டு இருக்கிறது.

பயில்வான் ரங்கநாதன் உடன் நடுரோட்டில் சண்டை போட்ட நடிகை ரேகா நாயரும் பிக் பாஸ் செல்ல இருக்கிறார் என கூறப்பட்டு வந்தது. அது பற்றி அவரிடம் பேட்டியில் கேட்டிருக்கின்றனர்.

"காட்டில் கூட எத்தனை நாள் வேண்டுமானாலும் இருப்பேன், ஆனால் பிக் பாஸ் வீட்டுக்கு போக மாட்டேன்" என கூறி இருக்கிறார். 
 

Leave a Reply