• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் அதிர்ச்சி தகவல்

கனடா

கனடாவில் வீட்டு வாடகை தொகைகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. சராசரியாக புது வாடகை குடியிருப்பாளர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு 2117 டாலர்களை வாடகையாக செலுத்த நேரிட்டுள்ளது.
  
பிரபல இணையத்தளமான Rentals.ca வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் சராசரி வாடகை தொகையானது சுமார் 9.6 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

கடந்த மே மாதம் முதல் சராசரியாக வீட்டு வாடகை தொகையானது சுமார் நூறு டாலர்களினால் மாதாந்தம் அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் அநேக பகுதிகளில் வாடகை தொகை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Leave a Reply