• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நோர்வூட்டில் முச்சக்கரவண்டி விபத்து - மூவர் காயம் 

இலங்கை

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில், முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி ஐம்பது அடி பள்ளத்தில் விழுந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (13) நண்பகல் 12.45 மணியளவில் இவ்விபத்து  சம்பவித்துள்ளதாகவும்,  இவ்விபத்தில்  முச்சக்கரவண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தை  என மூவரும் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply