• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாயமான மலேசிய விமானம் விபத்தில் சிக்கிய இடம் கண்டுபிடிப்பு

மாயமான மலேசிய விமானம் MH370 விபத்துக்குள்ளான இடம் புதிய தொழில்நுட்பத்தினூடாக கண்டுபிடித்துள்ளதாக நிபுணர்கள் தரப்பு அறிவித்துள்ளனர்.

மலேசிய விமானம் MH370 கடந்த 2014 மார்ச் 8ம் திகதி ஃபூகெட் தீவுக்கு அருகில் திடீரென்று மாயமானது. மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்ட 39 நிமிடங்களில் மொத்த தொடர்புகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டது.

மொத்தம் 239 பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து தவறான திசையில், அவுஸ்திரேலியாவை நோக்கிச் சென்றுவிட்டதாக நிபுணர்கள் தரப்பு அஞ்சுகின்றனர்.

தற்போது அந்த விமானம் தொடர்பில் 229 பக்கத்திற்கு ஆய்வறிக்கை ஒன்றை தயாரித்துள்ள நிபுணர்கள், அந்த விமானம் விபத்தில் சிக்கிய இடம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது பெர்த்தில் இருந்து 1560 கிமீ மேற்கே விமானத்தின் சிதைவுகள் காணப்படலாம் என குறிப்பிட்டுள்ளனர். WSPR என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மலேசிய விமானம் தொடர்பில் கண்டறிந்ததாக கூறும் நிபுணர்கள், சுமார் 3 ஆண்டுகள் செலவிட்டு இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தியப் பெருங்கடலில் திருப்பி விடப்பட்ட மலேசிய விமானம் MH370, அங்கு எரிபொருள் தீர்ந்து விபத்துக்குள்ளானது என தெரிவிக்கின்றனர்.

4000 மீற்றர் ஆழத்தில் விமானத்தின் பாகங்கள் காணப்படலாம் எனவும் கூறும் நிபுணர்கள் விபத்து நடந்த இடத்தின் பரிந்துரைக்கப்பட்ட பாதிக்கும் குறைவான பகுதிகள் மட்டுமே மீட்புக் குழுவினரால் தேடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply