• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வட மாகாணத்தில் தென்னைப் செய்கையில் பாரிய வீழ்ச்சி - பிராந்திய முகாமையாளர் எச்சரிக்கை

இலங்கை

வட மாகாணத்தில் தென்னை செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதையடுத்து அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் தென்னை செய்கையை மேற்கொள்ள உள்ளதாக தென்னை அபிவிருத்தி சபையின் வடமாகாண பிராந்திய முகாமையாளர் தேவராசா வைகுந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் 02.09.2023 அன்றைய தினம் பளை தர்மங்கேணி பகுதியில் தெங்கு அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் பயிற்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள தென்னை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலும், தென்னை செய்கையில் ஆர்வம் உடையவர்களுக்கான ஒரு ஏக்கரில் தென்னை பயிற்சி செய்வதற்கான மானிய அடிப்படையிலான தென்னை கன்றுகளும், அவற்றிற்கான உரங்களும் வழங்கப்படவுள்ளன.

தற்பொழுது வட மாகாணத்தில் தென்னை செய்கை பாரிய வீழ்ச்சி காணப்பட்டுள்ளது.
அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் தென்னை செய்கையை மேற்கொள்ள உள்ளோம்.

அன்றைய தினம் நிகழ்வுக்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் வருவதற்கான பேருந்து ஒழுங்குகள் அவ்வந்த பிரதேசங்களில் உள்ள சங்கங்களின் ஊடாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

நிகழ்வு 9 மணி அளவில் ஆரம்பிக்கப்பட உள்ளதால் அனைவரையும் குறித்த நேரத்தில் சமூகமளிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply