• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தைவானை சுற்றி சீனா மீண்டும் போர் பயிற்சி

தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் சீனா ஆத்திரம் அடைந்தது. சில மாதங்களுக்கு முன்பு தைவானை சுற்றி கடலில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே தைவான் துணை அதிபர் வில்லியம்லாய், சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தைவானை சுற்றி மீண்டும் சீனா தனது போர் பயிற்சிகளை தொடங்கியுள்ளது.

தைவான் தீவை சுற்றி சீன கடற்படை மற்றும் விமானப்படை, கூட்டு வான், கடல் ரோந்து, ராணுவ பயிற்சிகளை இன்று அதிரடியாக தொடங்கியது. இதை சீன ராணுவ செய்தி தொடர்பாளரான ஷியி உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக சீனா கூறும்போது, தைவான் துணை அதிபர் லாய் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். தேசிய இறையாண்மை பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தது. கடந்த ஆண்டு அப்போதைய அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் தைவானுக்கு வந்த போது சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த நிலையில் தைவான் துணை அதிபர், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

 

Leave a Reply