• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தியாவின் முதல் 3டி பிரிண்டெட் தபால் நிலையம்

இந்தியா

இந்தியாவின் முதல் 3டி அச்சிடப்பட்ட அஞ்சல் அலுவலக கட்டிடத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்.

தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருகிறது. ஒரு கட்டிடம் கட்ட பல மாதங்கள் ஆகும் என்ற காலம் போய்விட்டது. மாறாக சில நாட்களில் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும்.

பெங்களூரில் கட்டப்பட்டுள்ள 3டி அச்சிடப்பட்ட தபால் நிலைய கட்டிடத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார். இது நாட்டின் முதல் 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தால் கட்டப்பட்ட தபால் நிலைய கட்டிடம் ஆகும்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18, 2023) பெங்களூரு ஹலசூரில் நாட்டின் முதல் முப்பரிமாண அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பெங்களூரில் அச்சிடப்பட்ட இந்த 1021 சதுர அடி கட்டிடம் வெறும் 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது.

கட்டுமான பணிகள் தொடர்பான வீடியோவை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 3டி தபால் நிலைய கட்டிட திறப்பு விழாவில் பேசிய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை பாராட்டினார். இதுபோன்ற கட்டிடங்களால் நேரமும் செலவும் மிச்சமாகும் என்றார். முப்பரிமாண தபால் நிலையத்தை உருவாக்கி நாட்டிற்கு உத்வேகம் அளித்ததற்காக அவர் பாராட்டப்பட்டார்.
 

Leave a Reply