• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரை வாழ்க்கையில் வெற்றி பெற முக வசீகரம் மிகவும் அவசியம். 

சினிமா

திரை வாழ்க்கையில் வெற்றி பெற முக வசீகரம் மிகவும் அவசியம். அது அவருக்கு சற்று தூக்கலாகவே அமைந்தது. கோடானுகோடி மக்கள் அவரின் முகத்தை காண இரண்டு மூன்று நாட்கள் காத்திருந்தது எல்லாம் இந்த தலைமுறை மக்களுக்கு பிடிபடாத விசயம். ஆனால் அதுதான் மக்கள் திலகம் எம்ஜிஆர்.

தன் திரைப்படங்களில் தப்பித் தவறி கூட மது அருந்துதல் புகைப்பிடித்தல் போன்ற காட்சிகளை வைக்காதவர். அந்த அளவுக்கு இந்த தீய பழக்கங்களை அறவே வெறுத்த வெள்ளை மனதுக்காரர். தவிரவும் தனது படங்களில் தாய் பாசத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தந்து இருப்பார் . இன்று முதியோர் இல்லத்தில் அன்னையை சேர்க்கும் தலைமுறைக்கு இது எல்லாம் புரிய வாய்ப்பில்லை.

இவரின் மேடைப்பேச்சுக்களாகட்டும் திரை வசனங்கள் ஆகட்டும் மக்களின் மனதுக்கு நெருக்கமாக வே இருக்கும். அடுக்கு மொழியில் அலங்கார பொய்களை வசனங்களாக அரைமணிநேரம் மூச்சு விடாமல் பேசிய அந்த காலக்கட்டத்தில் மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா என வில்லன் கேட்க சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்றோடிப்போகும் என ஒற்றை அடியில் நெற்றியடி வசனம் பேசியவர். எம்ஆர் ராதா சுட்ட பின் தன் குரலில் பெருமளவு மாற்றம் வந்தாலும் அதையும் மக்கள் ஏற்றுக்கொண்டு கொண்டாடினர்.
பல உயரங்களை திரைவாழ்வில் தொட்டுவிட்ட போதிலும் புகழ்பெற்ற திரை தயாரிப்பாளர்களை முதலாளி என்றுதான் அழைப்பாராம். முதலாளி நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்ற பரந்த சிந்தனைதான் காரணம். தவிரவும் தன் படத்தில் வரும் திரைக்கதை வசனம் குறிப்பாக பாடல்களில் அவர் காட்டிய கவனம் வேறு எந்த நடிகராலும் காட்ட முடியாது என்பதே உண்மை. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அதோ அந்த பறவை என்ற பாட்டிற்காக மிகவும் மெனக்கெட்டு பம்பாயில் இருந்தால் கண்ணதாசனிடம் பாட்டை கேட்டு வாங்கிய தாகட்டும் அவருடன் உட்சபட்ச சண்டை நடந்து கொண்டருந்த காலத்தில் கவி அரசுவின் விழயே கதை எழுது என்ற பாடலை உரிமைக்குரலில் பயன்படுத்திக் கொண்டதாகட்டும் தனது தனிமனித விரோதங்கள் வெற்றியை பாதித்துவிடக்கூடாது என்ற புத்திசாலித்தனமான அணுகுமுறையை கொண்டவர். 

பசி என்றால் என்ன என்பதை தன் சிறு வயதில் அனுபவித்தவர். தன் தாய் வீட்டு வேலை பார்த்து அதில் கிடைத்த பழைய சோற்றில் வளர்ந்ததை கடைசி வரை மறவாதவர். அதனால்தான் தன் ராமவரம் தோட்டத்திற்கு வந்தவர்களை வெறும் வயிற்றுடன் அனுப்பி வைக்காமல் சாப்பாடு போட்டு அனுப்பி வைத்தார். பசி இருந்தால் மாணவர்கள் படிக்கமாட்டார்கள் என்று எண்ணி சத்துணவு திட்டமாக மாற்றி பசியை போக்கினார்.
அதனால்தான் அவரை பொன்மனச்செம்மல் என்று எல்லோரும் கொண்டாடினார்கள்.

 

Prashantha Kumar

Leave a Reply