• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷ்யாவிற்கு உதவுவதை நிறுத்துங்கள் - ஈரானுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள சலுகை

ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் வழங்குவதை நிறுத்தினால் ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் வான் தாக்குதல் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் உக்ரைனுக்கு பிரித்தானியா, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் குறைந்த தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள், ஆளில்லா ட்ரோன்கள், வான் பாதுகாப்பு தடுப்பு தொழில்நுட்பங்களை வழங்கி உதவி வருகின்றனர்.  

ரஷ்யாவை பொறுத்தவரை, ஈரான் அதன் அதிநவீன ஆளில்லா தாக்குதல் ட்ரோன்களை ரஷ்யாவிற்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த ட்ரோன்கள் சிறப்பான தாக்குதல் திறன் கொண்டு இருப்பதுடன், இலக்குகளை துல்லியமாக அடையாளம் கண்டு தாக்குதலை முன்னெடுக்கும் திறன் கொண்டது.

இந்நிலையில் ஈரானுக்கு அமெரிக்கா சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி, ரஷ்யாவிற்கு ஈரான் செய்து வரும் ட்ரோன் விற்பனையை நிறுத்தினால், அதற்கு பதிலாக ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக அமெரிக்கா சலுகை வழங்கியுள்ளது.

இதனுடன் தெஹ்ரான் மாஸ்கோவிற்கு ஆளில்லா ட்ரோன்களை விற்பனை செய்வதை நிறுத்துவதுடன், ட்ரோன் தொடர்பான உதிரிபாகங்களையும் ரஷ்யாவிற்கு விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் வாஷிங்டன் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தியை பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. 
 

Leave a Reply