• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை விஜயம்

இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் 14 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் குழு செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து கலந்துரையாடல்களை நடத்தும் என அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், இலங்கையின் பொருளாதார கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக, சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 48 மாத நீடிக்கப்பட்ட கடனுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியது.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது, நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல் மற்றும் இலங்கையின் வளர்ச்சி திறனை வெளிக்கொணருவதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை கொண்டுவருவதே இதன் நோக்கமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் முடிவு காரணமாக மார்ச் மாதத்தில் சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவி இலங்கைக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் இறுதி வரை திட்டத்தின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, அதனை மறுஆய்வு செய்து அடுத்தகட்ட கடன் உதவியை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும்.

அதன் ஒருபகுதியாக கடந்த மே மாதம் இடம்பெற்ற முதல் மீளாய்வைத் தொடர்ந்து, செப்டெம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள அடுத்த மீளாய்வு கோட்டத்தின் பின்னர் இலங்கைக்கு அடுத்தகட்ட நிதி உதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 

Leave a Reply