• Welcome to TamilsGuide
செய்திகள் 1

48 ஆண்டுகள், சரித்திர சாதனை படைத்த ரஜினி

சினிமா

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வரும் ரஜினி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபல நட்சத்திரமாக மின்னி கொண்டிருக்கிறார். அந்த வகையில் 72 வயதிலும் எனர்ஜி குறையாமல் தான் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.  

அண்மையில் வெளிவந்த ஜெயிலர் படமே இதற்கு முக்கிய சாட்சியாக இருக்கிறது. கடந்த பல வருடங்களாக ஏராளமான விமர்சனங்களை சந்தித்து வந்த சூப்பர் ஸ்டார் அதை அடித்து நொறுக்கும் அளவுக்கு ஜெயிலர் மூலம் மிகப்பெரும் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

இப்படி புகழின் உச்சியில் இருக்கும் சூப்பர் ஸ்டார் திரையுலகத்திற்கு இன்று தான் அறிமுகமானார். சிவாஜி ராவ் என்ற மனிதர் சூப்பர்ஸ்டாராக மாறுவதற்கு அடித்தளம் போட்டதும் இன்று தான். பாலச்சந்தர் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படம் தான் சூப்பர் ஸ்டாருக்கு அறிமுகத்தை கொடுத்தது.

வில்லனாக அறிமுகமான இவர் பின்னாளில் மிகப்பெரும் ஹீரோவாக அதுவும் சூப்பர் ஸ்டார் ஆக உருவெடுப்பார் என்று அப்போது சொல்லி இருந்தால் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் தனக்கென ஒரு ஸ்டைலை வைத்து முன்னேறிய ரஜினி இன்று உச்ச நட்சத்திரமாக மாறி இருக்கிறார்.

இதற்கு இடையில் இவர் கடந்து வந்த எத்தனையோ விமர்சனங்கள் இருக்கிறது. ஆனாலும் தன்னுடைய வெளிப்படையான பேச்சாலும், எளிமையான குணத்தாலும் இன்று வரை இவர் நிலைத்து நிற்கிறார். அந்த வகையில் தற்போது இவருடைய ஜெயிலர் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடி இருக்கிறது.

அதையடுத்து லால் சலாம், ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170, லோகேஷ் இயக்கும் படம் என்று சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளிவர இருக்கிறது. இப்படி பம்பரமாக சுழன்று வரும் ரஜினியின் 48 ஆண்டுகால சரித்திர சாதனையை இன்று ரசிகர்கள் பெருமிதத்துடன் கொண்டாடி வருகின்றனர். 
 

Leave a Reply