• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டைம்ஸ் சதுக்கத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் - மாஸ் காட்டிய வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு என நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் உலக நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், முக்கிய தலைவர்கள் இந்தியாவுக்கு தங்களின் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.
 

Leave a Reply