• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாதனை மனிதன்

தமிழ்நாடு

1971ஆம் ஆண்டு முன்புவரை பத்து பைசாவிற்கு வீதியில் ஐஸ் விற்றவர் ஜிகே சந்திரமோகன்
சொத்தை விற்று கடன் வாங்கி ரூ13ஆயிரத்தை  திரட்டி 
1971ஆம் ஆண்டு ஜிகே அண்ட் கோ நிறுவனத்தை உருவாக்கி அருன் ஐஸ்க்ரீம் என்னும் தயாரிப்பை தமிழகத்திற்கு கொடுத்தார் 
இன்று தமிழக பட்டித்தொட்டியிலும் இவருடைய தயாரிப்பான அருன் ஐஸ்க்ரீம் பிரபலமாகிவிட்டது
இதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது
ஐஸ்க்ரீமிற்கு மூலதனம் பால் கொள்முதல் பிறகு அந்த பாலையும் தொழிலாக செய்தார் 
1995ஆம் ஆண்டு ஆரோக்யா பால் என்னும் தயாரிப்பினை சந்தைகளில் இறக்கிவிட்டார் அதுவும் இவருக்கு நல்ல ஒரு வெற்றியே பெற்றுக்கொடுத்தது

அதோடு நின்றுவிடாமல் மோர் தயிர் வெண்ணைய் நெய் என்று பால் சம்பந்தப்பட்ட பொருட்களையும் சந்தையில் இறக்கிவிட்டார் எல்லாமே மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது 
இன்று இவருடைய நிறுவனம் வருடத்திற்கு சுமார் ரூ5000 கோடிவரை வருமானம் ஈட்டுகிறது 
உண்மை உழைப்பு உயர்வு இவரை உச்சத்தில் ஏற்றியுள்ளது....
இது போன்ற பதிவுகள் படித்துவிட்டு கடந்து போவதற்காக அல்ல....
நாமும் நம் வாழ்வில் உத்வேகத்துடன் முன்னேற வேண்டும் என்பதற்காகவே...

Raja K Welder

Leave a Reply