• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனி வரி மோசடிக்கு இதுவரை தீர்வில்லை - சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

இலங்கை

சீனி வரி மோசடியில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை மீட்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நடைபெற்ற பொது நிதி தொடர்பான குழுக் கூட்டத்தின் போது நிதியமைச்சு நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக அதிருப்தி வெளியிட்டார்.

சட்டமா அதிபருடன் கலந்துரையாடிய உள்நாட்டு இறைவரி திணைக்களம் இது தொடர்பில் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கோப் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு நிலுவையில் உள்ளதால், நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் நடவடிக்கைகள் தொடரும் என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது என நிதியமைச்சின் அதிகாரிகள் கூறினர்.

எவ்வாறாயினும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சம்பந்தப்பட்ட தரப்பினர் வாபஸ் பெற்றால் நடவடிக்கை எடுக்க முடியுமா என கோப் குழு விசாரித்தது.

இதன்படி, உடனடியாக தெரிவிக்கப்பட்ட கவலைகள் தொடர்பில் குழுவுக்கு அறிவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் குழு கோரியுள்ளது.

மேலும் கோதுமை மாவில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகள் தொடர்பாக முன்னர் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக நிதியமைச்சு தெரிவிக்கத் தவறியமை குறித்தும் பொது நிதிக்கான குழு கவலைகளை எழுப்பியது.

அத்தோடு ஜூலை 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 1969 ஆம் ஆண்டு இலக்கம் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகளும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

Leave a Reply