• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முடிந்தால் கைது செய்யுங்கள் - சாமர சம்பத் சவால்

இலங்கை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இடம்பெறும் இரும்பு திருட்டுடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

சீமெந்து கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் செனரத் பெரேரா மற்றும் முன்னாள் தலைவர் காமினி ஏக்கநாயக்க ஆகியோரினால் இது தொடர்பான முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தன்னில் பிழை இருக்குமாயின் சி ஐ டி யினர் தன்னை வந்து கைது செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் நாடாளுடன்றில் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் இதற்கு முன்னரும் இது தொடர்பாக கூறியிருந்தேன். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இடம்பெறும் இரும்பு திருட்டுடன் எனக்கு சம்பந்தம் இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நான் இது குறித்து தெளிவுப்படுத்தியிருந்தேன். நான் இப்போது சி ஜ டிக்கு செல்கின்றேன். என்னை கைது செய்யுமாறு அவர்களிடம் கூறுங்கள்.

நான் பிழை செய்திருந்தால் என்னை கைது செய்ய வேண்டமல்லவா? வெறுமனோ முறைப்பாடு அளிக்க முடியாது.

என்னில் பிழை இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் என்னை கைது செய்யுமாறு கூறுங்கள். அப்போது நான் செல்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply