• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக்கூறி மோசடி - மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை

மட்டக்களப்பில், டுபாய் நாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக 150 பேரிடம் சுமார் 2 கோடி ரூபா பணத்தை வாங்கி ஏமாற்றிய போலி முகவர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், காத்தான்குடி நாவற்குடா பகுதியில் அவரது உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்தபோது, குறித்த வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்ட நிலையில் அங்கு பதற்றமானதொரு சூழ்நிலையும் நேற்று ஏற்பட்டது.

இதன்போது, பாதிக்கப்பட்டவர்கள் குறித்த போலி முகவரை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பிரபல நிறுவனம் ஒன்றின் சந்தைபடுத்தல் குழு தலைவர் என்ற போலி அடையாள அட்டையொன்றை காண்பித்தே பொது மக்களிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இந்த அடையாள அட்டையை காட்டி டுபாய்க்கு குறித்த நிறுவனத்தின் அனுசரணையுடன் குறைந்த செலவான 2 இலச்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் வேலைக்கு அனுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சின்ன ஊறணியைச் சேர்ந்த 40 பேர் குறித்த போலி முகவிரிடம் ஒருவருக்கு தலா ஒரு இலச்சத்து 20 ஆயிரம் ரூபா வீதம் 48 இலச்சம் ரூபாய் பணத்தை சட்டத்தரணி ஊடாக ஒப்பந்தம் செய்துகொண்டு பணத்தை வழங்கியுள்ளார்.

இவ்வாறு கிளிநொச்சி முளங்காவில், மட்டக்களப்பு, கல்லடி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, கொக்குவில் உட்பட பல்வேறுபட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட 150 இற்கும் மேற்பட்டவர்களும் குறித்த போலி முகவரிடம் பணம் வழங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு கூட்டுறவு சங்க கட்டிட மண்டபத்தை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து அங்கு அனைவரையும் வரவழைத்து அவர்களின் ஆவணங்களை பரிசோதனை செய்து ஒரு போலி ஒப்பந்தம் செய்து கொண்டு, முதலில் ஓரு இலச்சத்து 20 ஆயிரம் ரூபாவை முற்பணமாக செலுத்துமாறும் மிகுதியை வெளிநாடு சென்றதும் தரவேண்டும் என தெரிவித்தும் 3 வங்கி கணக்குகளை வழங்கி அதில் பணத்தை வைப்பு செய்யமாறு குறித்த முகவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பலர் குறித்த வங்கி கணக்கில் பணத்தை வைப்பு செய்ததுடன் சிலர் நேரடியாக போலி முகவரிடம் பணத்தை கொடுத்துள்ளனர்.

எனினும் பணத்தை கொடுத்து 7 மாதங்களாகியும் டுபாய்க்கு அனுப்பாது இவர் ஏமாற்றி வந்த நிலையில், டுபாயில் உள்ள பிரதான நிறுவனம் தன்னை ஏமாற்றி விட்டார் என குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே பாதிக்கப்பட்ட 60 இற்கும் மேற்பட்டோர் குற்ற விசாரணைண பிரிவு காரியாலயத்தின் முன்பாக ஒன்று கூடி குறித்த நபரை கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், ஒருகுழுவினர் முகவரின் நாவற்குடா வீட்டை முற்றகையிட்டு அவரை பிடித்துகொண்டு பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் சுமார் 150 க்கு மேற்பட்வர்களிடம் 2 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply