• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் மாயமான தமிழர்

கனடா

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போனது தொடர்பில் டொரண்டோ காவல்துறையினர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். பொலிஸார் வெளியிட்ட தகவலில், 54 வயதான சிவதாஸ் கடைசியாக ஒண்டாறியோவின் விண்ட்சரில் ஜூலை 31ஆம் திகதி காணப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.
  
5 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட சிவதாஸ் ஒல்லியான உடல் வாகு கொண்டவர் என விவரிக்கப்படுகிறார்.

இந்நிலையில் காணாமல் போனவரின் அவரின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தொடர்பில் 416-808-4100-ஐ தொடர்பு கொள்ளலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 

Leave a Reply